Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாட்டில் வேகம் எடுக்கும் கொரோனா! குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி! 

#image_title

தமிழ்நாட்டில் வேகம் எடுக்கும் கொரோனா! குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று உறுதி! 

தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று ஒரே நாளில் ஏழு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்கு வந்த நிலையில் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டுள்ளனர். இந்நிலையில் மறுபடியும் கொரோனாவின் தாக்கம் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக பரவ தொடங்கியதை தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து குமரி மாவட்டத்தில் 5 நாளில்  11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் இருந்து கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சுமார் 420 பேருக்கு காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை செய்தனர்.

இந்த பரிசோதனை முடிவில் சுமார் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் பகுதியில் 4 பேரும், மேல சூரங்குடி பகுதியில் ஒரே வீட்டில் 2 பெண்களுக்கும், அதே பகுதியில் மேலும் ஒரு பெண்ணிற்கும், அதையடுத்து சின்னவண்ணான்விளை பகுதியில் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமையில் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அகஸ்தீஸ்வரம் பகுதியில் ஒருவருக்கும், ராஜாக்கமங்கலத்தில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனா பரவல் மிகவும் வேகமாக பரவத் தொடங்கி வருவதால் குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகுந்த பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் யாருக்கேனும் காய்ச்சல் மற்றும் சளி போன்ற தொந்தரவுகள் இருந்தால் மருத்துவமனைக்குச் சென்று உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Exit mobile version