இன்னும் தடுப்பூசி போடலையா.?! புதுவகை கொரோனா தொற்று உஷார்!!

0
146

புதியவகை கரோனா பரவும் அபாயம் உள்ள காரணத்தால் தடுப்பூசி ஒன்றே தீர்வு என மருத்துவ குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மக்களை ஆட்டி படைத்துக்கொண்டு இருக்கின்றது. முதலில் டிசம்பர் 31 சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்த இந்த கொரோனா நோய் அரசு எவ்வளவோ கட்டுப்பாடு விதித்தும் பிற நாடுகளிலும் பரவியது.

இதனால், அனைத்து நாட்டு அரசும் செய்வதறியாது திக்குமுக்காடி கொண்டிருந்த நேரத்தில் பல நாட்டு அரசும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என்றது. பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இந்தியாவில் 100 கோடி கொரோனா டோஸ் செலுத்தப்பட்டது.
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் அதிக மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

ஆயினும், பலர் கிராமப்புறங்களிளும் நகர்புறங்களிலும் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். சிலர் முதல் டோஸ் செலுத்தி கொண்ட பிறகும் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள அஞ்சுகிறார்கள்.
அரசும் எவ்வளவு அறிவுரைகள் வழங்கினாலும் மக்கள் செலுத்த மறுக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்குபவர்களால் புதிய வகை கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்வது அவசியம் என்று பல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் தயக்கம் பயம் காரணமாக தடுப்பூசி செலுத்த தயங்குகின்றனர். இதனால் புதிய வகை கொரோனா மக்களிடையே பரவ வாய்ப்பு அதிகவுள்ளது.

இதை கவனத்தில் கொண்டு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி பற்றிய அச்சத்தை பொதுமக்களிடம் போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்போலோ டெலிஹெல்த் மூத்த மருத்துவர் முபாஷீர் அலி அறிவுறுத்துகிறார். மேலும், மருத்துவனை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறுகையில் அரசு மக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்தவேண்டும். தனி குழுவாக அமைத்து துரிதப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதன் மூலமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால், மக்களிடம் புதிய வைரஸ் அதிக பரவும்.

மேலும், இது அவர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களினால் அக்கம்பக்கத்தினர், நண்பர்கள், அவர்களது குடும்பத்தினர் என்று அனைவரும் பாதிக்கப்படுவர். அதனால், மக்கள் தடுப்பூசியை முன்வந்து செலுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.