Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமெரிக்காவில் சரமாரியாக அதிகரிக்கும் போகும் கொரோனா

மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலங்களான கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, டெக்ஸஸ் ஆகியவற்றில் நோய்த்தொற்று குறையத் தொடங்கியுள்ளது. நீண்ட விடுமுறையான இவ்வார இறுதியில் மட்டும் அமெரிக்காவில் சராசரியாக நாள் ஒன்றுக்குப் புதிதாக 44,000 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவின் 22 மாநிலங்களில்கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த வாரம் நீண்ட விடுமுறை என்பதால் மக்கள் குடும்பங்களுடன் சேர்ந்து விடுமுறையைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது 22 மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது, அதுவும் குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதிகளில். சௌத் டகோட்டாவில் 126 விழுக்காட்டு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் கடந்த இரண்டு வாரங்களில் பதிவாகியுள்ளன. தற்போது அயோவா, நார்த் டகோட்டா மாநிலங்களிலும் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது.

 

Exit mobile version