திருவாரூர் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்திருக்கிறது.
திருவாரூர் நகர் நாலுகால் மண்டபம் என்ற இடத்தில் வசித்து வருபவர் லோகநாதன் சுமார் 65 வயது மதிக்கத்தக்க இவர் கூலி தொழிலாளியாக இருந்து வந்திருக்கிறார். இவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு உண்டானது. இதன் காரணமாக, நோய்த் தொற்று பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குறைந்த அளவிலான பாதிப்பு இருந்தபடியால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி லோகநாதன் தன்னுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தார். இந்த சூழ்நிலையில் நோய்த் தொற்று பரவல் ஏற்பட்டதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள் திருவாரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உதவியுடன் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் அதோடு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா நோயாளி தற்கொலை! திருவாரூரில் பரபரப்பு!
