புதிய விஸ்வரூபமெடுக்கும் கொரோனா வைரஸ்:! நெகட்டிவ் வந்தாலும் கொரோனா உறுதி! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

0
108

புதிய விஸ்வரூபமெடுக்கும் கொரோனா வைரஸ்:! நெகட்டிவ் வந்தாலும் கொரோனா உறுதி! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

புதிய அறிகுறிகளுடன் தற்போது கொரோனா தொற்று பரவி வருவதாக சுகாதார துறை மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.இதனால் நோய்க்கு எதிராக போராடும் மக்களுக்கும்,மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறைக்கு கரோனா வைரஸ் பெரிய சவாலாக மாறியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் இரண்டாம்
வாரத்திலிருந்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.அதாவது நாள் ஒன்றுக்கு 350 -தாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வந்தது.ஆனால் தற்போது இந்த எண்ணிக்கையானது படிப்படியாக குறைந்து கொண்டேவருகிறது.

இதன் காரணமாக தொற்று குறித்து பொதுமக்களுக்கு அச்சம் குறைந்துவிட்டதால் கடைகள், ஷோரூம்கள், துணிக்கடைகள் போன்ற பொது இடங்களில் கூட்டம் அலை மோதுகிறது.இது மட்டுமின்றி வருந்தத்தக்க செய்தி என்னவென்றால் பெரும்பாலானோர் கொரோனா விதிகளை கடைபிடிக்க மறந்துவிடுகின்றனர். இதனால் தற்போது சிலருக்கு புதிய அறிகுறிகளுடன் நோய் பரவுவதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை சளி,இரும்பல், காய்ச்சல், என்ற அறிகுறிகளுடனும் மற்றும் எவ்வித அறிகுறிகள் இல்லாமலும் தொற்று பரவி வந்தது.அதிலும் சில நபர்களுக்கு நுகரும் தன்மை மட்டும் குறைந்து எவ்வித வாசனையும் தெரியாமல் தொற்று பரவி வந்தது.இதுப்போன்றெல்லாம் வாழப் பழகிவிட்ட மக்களுக்கு தற்போது புதிய சவால் உருவாகியுள்ளது.
அதாவது சாதாரணமாக உடல் சோர்வுடன் இருக்கும் நபர்களுக்கு சில நாட்களுக்கு பிறகு காய்ச்சல் ஏற்படுகிறது.இவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கும்பொழுது நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வருகின்றன.ஆனாலும் இவர்களின் நுரையீரலை ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது குருநாத் தொற்று பரவி இருப்பது தெரியவருகிறது.
இவ்வாறு புதிய வடிவத்திலும் கொரோனாத் தொற்று தற்போது பரவி வருவதால்
சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் இது அவர்களுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.

எனவே பொதுமக்கள் கொரோனா தொற்று குறைந்து விட்டதாக தவறாக நினைத்து வழி முறைகளை கடைப் பிடிக்காமல் இருக்க
வேண்டாமென்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.இதற்கு மேலும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் முகக் கவசங்கள் அணிவது,அடிக்கடி கைகளைக் கழுவுவது,சமூக இடைவெளியை பின்பற்றுவது, போன்ற வழிமுறைகளை கடைபிடித்து தங்களை நோய் தொற்று பரவுவதிலிருந்து காத்துக்கொள்ளும்மாறு சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.