Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மேலும் ஒரு எம்.பிக்கு கொரோனா உறுதி ! சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம்!

மேலும் ஒரு எம்பிக்கு கொரோனா உறுதி சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம்.

கொரோனா வைரஸ் தொற்று அனைவருக்கும் பரவி வருகிறது. அமைச்சர்களையும் விட்டு வைக்கவில்லை.சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னால் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் இவர் என்று அனைவருக்கும் தெரிந்ததே.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கார்த்திக் சிதம்பரம்
‘எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.லேசான சளி,இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன்’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சமீபத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்த அவரது நண்பர்கள் மற்றும் கட்சித் கட்சியினருக்கும் மருத்துவரைச் சென்று அணுகுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version