Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நம் உடலில் கொரோனா உள்ளதா? பரபரப்பை கிளப்பும் விளக்கம்

கடந்த டிசம்பர் மாத இறுதியிலிருந்து உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா நோய்த் தொற்ற . இந்நோயிலிருந்து தங்களை பாதுக்காத்துக் கொள்ள உலகநாடுகள் ஒவ்வொன்றும் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர்.

இந்த கொரோனா நோய்த் தொற்றானது மிகப்பெரிய பொருளாதார சரிவை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்ப கட்டத்தில் குறைந்த அளவிலான கொரோனா பாதிப்பே இருந்த நிலையில் தற்போது பாதிப்படைந்த நாடுகள் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது.

எனவே இந்தியாவில் ஊரடங்கு மிகத்தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. பெரும்பாலானோர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். ஊரடங்கு பின்பற்றப்பட்ட அதே நேரத்தில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான கொரோனா நோய்த் தொற்று சோதனைக் கருவிகள் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு அறிகுறி தென்பட்ட அனைவருக்கும் நோய்த் தொற்று சோதனை செய்யப்பட்டன. அதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியும் செய்யப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வெளியிட்ட காணொளி ஒன்றில் கொரோனா நோய்த் தொற்று ரைனோ நோய்த் தொற்று என்ற இனத்தை சார்ந்ததது என்றும், இந்த ரைனோ நோய்த் தொற்று தான் நம்மில் ஏற்படும் ஜலதோஷம், இருமலுக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இது எப்பொழுதும் நம்முள் இருக்கும் என்றும், இதனால் நமக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளவர் மருத்துவ சோதனையின் போது கொரோனா நோய்த் தொற்று உறுதி ஆவதற்கும் இது தான் காரணமென்றும் கூறியுள்ளார்.

மேலும் வீட்டை சுத்தம் செய்யும் போது பல நாட்களுக்கு முன் தொலைத்த பொருள் மறுபடியும் கிடைப்பது போல தான் இந்த கொரோனா நோய்த் தொற்று மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டு கொரோனா தனிப்பிரிவில் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என விளக்கியுள்ளார்.

இதனால் தான் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும் அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

இக்காணொளி பெரும்பாலானோரால் வரவேற்கப்பட்டு சமூக வலைதளங்கலில் பகிரப்பட்டு வருகிறது. அதே சமயம் இந்த கொரோனா நோய்த் தொற்று சாதரணமானது என்றால் மக்கள் ஏன் இறக்கின்றனர்? எனவும் கேள்விகள் எழுப்பப்படுகிறது.

Exit mobile version