தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பை உறுதி செய்ய அரசு அதிகாரிகள் ஆய்வு

0
164

தென்காசி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவுறுத்தலின் படி கொரோனா பாதுகாப்பை கடைபிடிக்கிறார்களா என பாதுகாப்பை உறுதி செய்ய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு அறிவுறுத்தியுள்ளது போல பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிக்கிறார்களா என்பது குறித்து தென்காசி மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு அறிவுறுத்தலின் படி கடைகள் , வியாபாரிகள்,மற்றும் வாகனங்களில் செல்வோர் முகக்கவசம் அணிந்து செல்கின்றனரா என வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் அச்சன்புதூர் காவல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடைகள் வைத்திருப்போர் மற்றும் வியாபாரிகளிடம் கடைக்கு பொருள் வாங்க வரும் பொதுமக்களும் தவறாமல் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தினர். முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் கடைக்காரர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.