கொரோனா மாத்திரை விற்பனைக்கு தயார்! விலை ரூ.35 – வெளியானது அதிரடி அறிவிப்பு

0
136
Molnupiravir

கொரோனா மாத்திரை விற்பனைக்கு தயார்! விலை ரூ.35 – வெளியானது அதிரடி அறிவிப்பு

உலக நாடுகளில் பரவி வந்த உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது.குறிப்பாக அதன் பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன் காரணமாக பல்வேறு மாநில அரசுகள் தளர்வுகளை நீக்கி மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அறிவித்து வருகின்றன.சில மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளன.

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 37,379 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது போல சுகாதார நிறுவனங்கள் மற்றும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் கேப்சூல் வடிவிலான மோல்னுபிரவிர் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது.
இந்தியாவில் இந்த மாத்திரையை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்து வழங்க அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கொரோனா சிகிச்சைக்கான இந்த மாத்திரை ஒன்றின் விலையானது  ரூ.35 என அறிவித்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக தேவைப்படும் இந்த 40 கேப்சூல்களின் மொத்த விலையானது ரூ.1,400 ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்  இந்தியாவில் மொத்தம் 13 நிறுவனங்கள் இந்த மாத்திரையை உற்பத்தி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.அடுத்த வாரம் இந்தியா முழுவதுமுள்ள மருந்து கடைகளில் இந்த மாத்திரையானது கிடைக்க வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.