கொரோனா டெஸ்ட் ஆ…ஆள விடுங்கடா சாமி என தெரித்தோடிய மக்கள்!
கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.
அப்போது பல கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகளும் நிறுவியது.ஆனால் பல கடுப்படுகளை நிறுவியும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.அந்தவகையில் இந்தியாவில் மட்டும் ஓர் நாளில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,43,692 ஆக உள்ளது.இதைக்கட்டுப்படுத்த வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் மூலம் தங்கள் மாநிலத்தில் கொரோனா தொற்றானது பரவாமல் இருக்க,அவர்கள் கொரோனா பரிசோதனையை எடுத்துக்கொள்ளவேண்டும் மற்றும் தங்களை தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு வலியுறுத்தி வந்த வண்ணமே தான் உள்ளனர்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்திருந்தார்.அந்தவகையில் பீகாரிலுள்ள ரயில் நிலையங்களில் ஸ்கிரீனிங் டெஸ்ட்டுகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதே போல பாட்னாவிலிருந்து வந்த ரயிலில் 100 க்கும் மேற்பட்ட பயணிகள் வந்துள்ளனர்.அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதார ஊழியர்கள் கூறியதும்,மக்கள் அலறி அடித்துக்கொண்டு ரயில் நிலையத்தை விட்டு ஓடிச்சென்றுள்ளனர்.
அங்கு ஓர் பெண் போலீஸ் மட்டும் இருந்ததால் அவரால் கட்டுபடுத்த முடியவில்லை.அங்கிருந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் இவர்கள் ஓடியதை பார்த்து செய்வதறியாது திகைத்தனர்.அதன்பின் சுகாதாரத்துறையினர் கூறியது,மக்கள் கொரோனா சோதனை செய்ய அட்ச்சப்பட தேவையில்லை.இது அனைவரின் நலனுக்காகவே எடுக்கப்படுகிறது.இது வாழ்கையின் முக்கியமான வழிமுறை எனவும் தெரவித்தனர்.