தொடர்ந்து மனித உயிர்களை காவு வாங்கும் கொரோனா! பீதியில் மக்கள்!
கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது.இதனால் பலகோடி மக்கள் இத்தொற்றால் பாதித்துள்ளனர்.கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டாலும் தடுப்பூசி போட்டுக்கொண்டர்வர்ககளுக்கே கொரோனா தொற்று உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா பாதித்தவர்களை தனிமை படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நம் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் அவர்களே தானாக வந்து மருத்துவமமனையில் சேர்ந்துக்கொள்கின்றனர்.
அதனால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அதிகப்படியான படுக்கைகள் போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.தற்போது கொரோனாவானது 3 வது அலையிலிருந்து 2வது அலையை நோக்கி சென்றுள்ளது.அதுமட்டுமின்றி தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.59 கோடியாக தாண்டி உள்ளது.தற்போது வரை 13,59,49,514 ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,38,810 ஆக உள்ளது.தற்போது இந்த கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையாக 1,02,606 ஆக உள்ளது.
இதே போல பிரேசிலில் ஒரே நாளில் 69,592 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.ஓர் நாளில் மாட்டும் அந்நாட்டில் 2,535 பேர் உயிளிழந்துள்ளனர்.இந்நாட்டைப் போல இந்தியாவிலும் அதிக அளவு இத்தொற்று பரவக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது.தற்போது அதிக பாதிப்புகள் உள்ள மாநிலங்களை நரேந்திரமோடி அவர்கள் காணொளி காட்சி மூலம் சந்தித்து பேசினார் அப்போது சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை போட்டுள்ளனர்.குறிப்பாக தமிழ்நாட்டில் எச்சரிகை மணி விடுத்துள்ளனர்.தற்போது போட்டுள்ள விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்காவிட்டால்,இரவு நேர ஊரடங்கு போடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.