Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனியார் மருத்துவமனை அனுமதி ரத்து! மாவட்ட நிர்வாகம் அதிரடி!

விருதுநகர்: கொரோனா சிகிச்சைக்காக ரூ.7.40 லட்சம் கட்டணம் வசூலித்ததாக அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அனுமதியை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்தது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசின் அனுமதி பெற்று சில தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்து வருகின்றன. இந்த வகையில் சிகிச்சை பெறும் பொதுமக்கள் அதிக நிதிச் சுமைக்கு ஆளாகாத வகையில் கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து அவ்வபோது அதிகாரிகள் ஆய்வு செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள சிட்டி மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது நோயாளி ஒருவருக்கு கொரோனா சிகிச்சைக்காக ரூ.7.40 லட்சம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

மேலும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அரசு வழங்கிய நெறிமுறைகளின்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை.

சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version