புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு மேலும் 30 பேருக்கு தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் நேற்று கொரோனாவால் ஒருவர் பலி மேலும் 30 பேருக்கு நோய் தொற்று அதிகரிப்பு.இதனால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மட்டும் 255 பேருக்கு கொரோனா தொற்று சோதனைச் செய்யப்பட்டதில் 30 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்து.
புதுச்சேரி சுகாதார துறை அமைச்சர் மோகன் குமார் இது குறித்து கூறியதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்து உள்ளது, அதில் 30 பேருக்கு நேற்று மட்டும் தொற்று கண்டறியப்பட்டது.கிரும்பாக்கம் அடுத்த மதிகிருஷ்ணா புறத்தை சேர்ந்த 64 வயதான அவர் நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று ஜிப்மரில் உயிரிழந்தார்.
புதுச்சேரியில் தற்போது வரை கொரோனொ தொற்றுக்கு உயிர் இழந்தோர் எண்ணிக்கையானது 8 ஆக உயர்ந்துள்ளது.கதிர்காமம் மருத்துவமனையில் 159 பேரும், ஜிப்மரில் 50 பேரும், காரைக்காலில் 8 பேரும், எனாமில் ஒருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 140 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும் இந்த மாநிலத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,409 இதில் 11,866 பேருக்கு தொற்று இல்லை மேலும் 190 பேருக்கு சோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது என கூறிய மோகன் குமார் 3 மாத குழந்தை, 11 வயது குழந்தை, 80 வயது பெரியவர் என அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் உள்ளவர்களை மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.