தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நீங்கியதாக அரசு அறிவிப்பு
உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பானது பல்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனையடுத்து உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்தன.இந்தியாவிலும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதனால் கொரோனா பாதிப்பானது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இதனையடுத்து ஏற்கனவே அமலிலில் உள்ள ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், 12 மாவட்டங்களில் பாதிப்பானது முற்றிலும் நீங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு நடத்திய பரிசோதனையில், சென்னையில் 11; செங்கல்பட்டில் 5; காஞ்சிபுரத்தில் 4; கடலுாரில் 2; கோவை, சேலத்தில் தலா ஒருவர் என 24 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த ஆறு மாவட்டங்களை தவிர, மீதமுள்ள 32 மாவட்டங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை.சிகிச்சை பெற்றவர்களில் 31 பேர் நேற்று குணமடைந்தனர்.
மேலும் மருத்துவமனையில் 40 பேர் உட்பட 256 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். குறிப்பாக கொரோனா தொற்றால் தற்போது உயிரிழப்பு இல்லை. மேலும் 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.