Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முகக்கவசம் அணியாவிட்டால் 30 ஆயிரம் அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு?

பிரேசில்: பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று பிரேசில் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டதில் பிரேசில் 2 வது இடத்தில் உள்ளது. பிரேசிலில் இதுவரை 11 லட்சம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றான முக கவசம் அணிவதை அந்நாட்டு அதிபர் போல்சோனரா பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போதும் கடைபிடிக்காமல் வந்தார். இது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை மீறிய செயலாகும்.

அதிபர் முக கவசம் அணியாமல் விதிமுறை கடைபிடிக்காதது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில், அதிபர் போல்சோனரோ கொரோனா பாதுகாப்பு
முக கவசம் அணியாமல் விதிகளை மீறினால் 2 ஆயிரம் ரியல்ஸ் அபராதம் செலுத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார். பிரேசிலின் 2 ஆயிரம் ரியல்ஸ் அபராதம் என்பது இந்திய மதிப்பில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பாகும். நீதிமன்ற உத்தரவின் பிறகும் விதிமுறை மீறி செயல்பட்டால் அபராதம் உறுதியாக வாய்ப்புள்ளது.

Exit mobile version