ஜீலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! முதல்வரின் அதிரடி உத்தரவு! -மம்தா பானர்ஜி

0
126

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினசரி நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,968 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 465 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றால் 4,56,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 2.58 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் மேற்குவங்கம் மாநிலத்தில் அடுத்த மாதம் ஜூலை 31 ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவைக்கும் வருகிற 31 வரை தடை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றால் மேற்கு வங்கத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். இதுவரை 580 பேர் அம்மாநிலத்தில் இறந்துள்ளனர். இந்தியாவில் 73 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.