Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி! -தமிழக முதல்வர்

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று (ஜூன் 27) மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்பு ஊடகதுறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். அவரது மனைவி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராக பணியாற்றி வரும் நிலையில், இவரது ஒப்பந்த பணியை நிரந்தர பணியாக்க வேண்டும் என்றும், அவரது இறப்பிற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் குரல் எழுந்தது. இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இறந்த வேல்முருகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் அவரது மனைவியின் பணியை நிரந்தர அரசு பணியாக்குவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Exit mobile version