Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வர் அலுவலகத்தில் கொரோனா.! பிற ஊழியர்களுக்கு சோதனை நடவடிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதைப்போல் புதுச்சேரியிலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும் 50 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 87 பேர் நோய் தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானது. இதனையடுத்து முதல் அலுவலக ஊழியர்கள் மற்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் பரவிய அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு 2 யாரும் பணிக்கு வர வேண்டாம் என்ற தகவலுடன் மூடப்பட்டுள்ளது. இதுவரை புதுவையில் 502 பேருக்கு கொரோனோ கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 187 நபர்கள் குணமடைந்துள்ளனர். மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Exit mobile version