Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்னுடைய ஆலோசனையை அரசு கேட்பதே இல்லை.! ஸ்டாலின் புலம்பல் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கொரோனோ தொற்று அதிகரித்து வருவதை தடுக்க நூற்றுக்கணக்கான ஆலோசனை கூறி வருகிறேன். இந்த நோயில் இருந்து மக்களை பாதுகாக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது. எனது ஆலோசனை முதல்வர் கேட்கவே இல்லை, அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பதுபோல் முதல்வர் அலட்சியமாக இருக்கிறார்’ என்று ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கூறவில்லை என்று முதல்வர் தரப்பில் கூறப்பட்டது. நான் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தரவில்லை என கூறுவதில் உண்மையில்லை. எனது ஆலோசனைகள் ஆக்கப்பூர்வமானதே என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிக மக்கள் நெருக்கமாக இருப்பதால் கொரோனா பாதிப்பு அதிகம் என்கிறார் முதல்வர். மக்கள் நெருக்கம் அதிகமான மும்பை தாராவியில் கூட கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் அலட்சியபோக்கால் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. தமிழக கொரோனாவின் பேரழிவுக்கு முதல்வர்தான் காரணம். இதனால்தான் ஒன்றிணைவோம் வா திட்டம் மூலமாக உதவிகள் செய்யப்பட்டது. சமூக பரவல் இல்லை என்று எடப்பாடி கூறுகிறார்.

அப்படியெனில் மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை வைத்தது யார்.? மின் கட்டண சலுகை வேண்டும் என குரல் கொடுத்தது யார்? மதுக்கடை திறக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தது யார்.? என்று ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Exit mobile version