Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உதயநிதி 420 செயலை செய்துவிட்டார்!அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்

சென்னை யானைக்கவுனி அருகேயுள்ள அண்ணா பிள்ளை தெருவில் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்த மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அங்குள்ள மக்களுக்கு முககவசம் மற்றும் கபசுர குடிநீரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;

கொரோனா தடுப்பு பணியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் களப்பணி செய்து வருகின்றனர். மைக்ரோ அளவில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெருக்கமான மக்கள் பகுதியில் தன்னார்வலர்கள் மூலம் ஏற்படுத்திய விழிப்புணர்வு வீண் போகவில்லை, அதனால் நல்ல பலன் கிடைத்துள்ளது. விரைவில் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்று கூறினார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயதிதி ஸ்டாலின் இ-பாஸ் வைத்துதான் சாத்தான்குளம் சென்றார் எனில் அதை ஏன் டுவிட்டரில் வெளியிடவில்லை? என்று கேள்வி எழுப்பியதோடு, உதயநிதி செய்தது 420 செயல் என்றும் விமர்சித்துள்ளார்.

சாத்தான்குளம் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் எழுப்பிய கேள்விக்கு, நீதிமன்றம் மூலம் விசாரணை நடைபெறுகிறது. தற்போது எந்த கருத்தும் சொல்ல முடியாது என தெரிவித்தார். உதயநிதி இ-பாஸ் பெற்றுதான் தூத்துக்குடி சென்றதாக திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு விளக்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version