உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகராப்பூர்வ அறிவிப்புடன் அமெரிக்கா அதிரடியாக வெளியேறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் சபைக்கு கீழ் இயங்கும் அமைப்பான உலக சுகாதார நிறுவனம், கொரோனா குறித்த தகவலை முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடவில்லை என்று அமெரிக்க தரப்பில் புகார் எழுந்தது.
கொரோனா தொற்று மனிதர்களிடையே பரவக்கூடிய நோய் என்பதை தெரிந்தும் சீனா மறைத்தது. இதைப்பற்றி வெளியிடாமல் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளதாக டிரம்ப் புகார் கூறினார். இந்த புகார்களை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்து வந்தது. ஒரு நிலையில் சுகாதார நிறுவனத்தின் செயல்பாட்டு நிதியை நிறுத்துவோம் என்றும், உடனே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று அமெரிக்கா அதிரடியாக தெரிவித்தது.
இந்நிலையில் கொரோனா தொற்று விவகாரத்தில் அமெரிக்காவின் புகார்களுக்கு செவிசாய்க்காத உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளுக்காக கமிட்டியில் இடம் வகித்துள்ள மூத்த செனட்டர் “ராபர்ட் மெனன்டஸ்” தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதியாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிரடியான விலகலைத் தொடர்ந்து மற்ற ஏதேனும் நாடுகள் விலகலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது.