Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு! டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட நபர்களுக்கு சிகிச்சை.!!

தமிழக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு! டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட நபர்களுக்கு சிகிச்சை.!!

உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட 1,103 பேர் தாமாகவே முன்வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர்களாகவே முன்வந்து மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 658 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது. மேலும் மற்ற நபர்களுக்கும் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 190 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 110 நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 234 ஆக நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா அறிகுறி இருந்தவர்களுடன் பழகிய நபர்கள் இருப்பின் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமிய நபர்களில் 1,103 பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது. இதில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்களுகும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 86,342 நபர்களும் அரசின் கண்காணிப்பில் 90 நபர்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு 234 ல் இருந்து 309 ஆக கூடியுள்ளது. தமிழகத்தின் கொரோனா தீவிரமடைந்து வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,069 ஆக் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

Exit mobile version