Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“தம்பி போயி மாஸ்க் போட்டுட்டு வாங்க’ விழிப்புணர்வில் கவனம் ஈர்க்கும் புதிய டெக்னிக்.!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் முக கவசம், அணிய வேண்டும் சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் கடைசி ஊரடங்கு அமலில் இருந்து இருந்து வருகிறது.

 

இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலர் தனது கடைக்கு முன்பு பேனர் வைத்து விழிப்புணர்வு மற்றும் வியாபாரத்தில் அசத்தி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாபர் உசேன் என்பவர் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். தனது கடைக்கு முன்பு வடிவேலு படத்தில் பேசி பிரபல காமெடி வசனங்களை அச்சிட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

 

காரைக்கால் காமராஸ் சாலையில் உள்ள கடை வாசலில் பல்வேறு வசனங்களும் இடம்பெற்றுள்ளன. அதில், “போ போ கூட்டம் போடாத போ’ என்கிற சூனா பானா வசனமும், “தம்பி போங்க தம்பி போயி மாஸ்க் போட்டுட்டு வாங்க’ என்ற பிரபல வின்னர் படத்தின் வாசகமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கடைக்கு முன்பு வாயால் விழிப்புணர்வு பற்றி கூறிய போது இல்லாத வரவேற்பு வடிவேலு வசனத்திற்கு கிடைத்துள்ளதாக கடையின் உரிமையாளர் கூறுகிறார்.

Exit mobile version