Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“சமூக அக்கறையில் சரோஜா’ தினமும் இலவசமாக முகக்கவசம் தயாரித்து கொடுக்கும் அதிசய மூதாட்டி.!!

சேலம் மாவட்டம் அண்ணா நகரைச் சேர்ந்த சரோஜா என்கிற மூதாட்டி, தினமும் 50 முக கவசங்களை தானே புதிதாக தயாரித்து பொது மக்களுக்கும், கொரோனா களப்பணியாளர்களுக்கும் வழங்கிவரும் நிகழ்வு பாராட்டை பெற்றுள்ளது. வயதான காலத்தில் வீட்டில் முடங்கி இல்லாமல் சமூக சேவையில் ஈடுபட்டு வருவது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இதுவரை 1,500 முக கவசங்களை தயாரித்து கொடுத்துள்ளாராம். மேலும் 5 ஆயிரம் பாதுகாப்பு முக கவசங்களை தயாரித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஆர்வமாக கூறுகிறார். இந்த யோசனையை தனது மகன் நடராஜ் கூறியதாக சொன்னவர், இலவசமாக துணி பெறுவதிலும் கிடைக்காவிட்டால் சொந்த செலவில் துணியை வாங்குவது, தைத்து முடித்த முக கவசங்களை பொது மக்களுக்கு வழங்குவது போன்ற செயல்களில் மகன் ஈடுபடுவதாக கூறினார்.

 

இருபது வயதில் கற்ற டெய்லர் தொழில் இன்று அவரை சமூக சேவகியாக மாற்றியுள்ளது. மூதாட்டி சரோஜாவின் செயலுக்கு அவரது குடும்பம் துணை நிற்கிறது. இவரது செயலை பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version