முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு

0
105

கொரோனோ பாதிப்பு காரணமாக தமிழகத்தில் வருகிற 31 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. நோய்த்தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் மற்றும் மருத்துவர் குழுவுடனும் ஆலோசனை நடத்தி அதற்கேற்ற முடிவுகளை எடுத்து வந்தார்.

 

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அப்பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது மதுரை, கோவை, தேனி போன்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், அதிகமான நோய் தொற்று பகுதிகள் பற்றியும், உடனடி நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில குறிப்பிட்ட ஊரடங்கு தளர்வுகள் பற்றிய முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ளது.