Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று! உடனே மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று தினசரி மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இந்த நோயானது பாரம மக்கள் முதல் அரசியல் கட்சி முக்கிய நபர்கள் வரை தீவிரமாக தொற்றி வருகிறது. இதனால் பலர் உயர் மருத்துவ சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் இறந்துள்ளனர்.

 

இந்நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினரான செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 16 ஆம் தேதி திமுக பிற எம்எல்ஏ-க்களான ஓசூர் சத்யா, தளி பிரகாஷ், வேப்பணம் பள்ளி முருகன் ஆகியோரை சிந்தித்த பின்னர் செங்குட்டுவன் ஊர்வலம் சென்றுள்ளார்.

 

ஊர்வலத்தின் பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ஓசூரில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது. இதன்பின்னர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Exit mobile version