கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பொதுவெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தமிழகம் முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் மக்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஊரடங்கு என்பதால் மற்ற விலங்குகள் சாலைகள், அலுவலகங்கள், மருத்துவமனை போன்ற இடங்களில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகின்றன. வாகன போக்குவரத்து மற்றும் பல்வேறு நிறுவனங்கள் திறக்காத காரணத்தால் இந்தியா முழுவதுமே காற்று மாசுபாடு பெருமளவு குறைந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் கல்புர்கி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பன்றிகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. விலங்குகள் கொரோனா தொற்றால் பாதித்திருந்தால் அதன்மூலம் மக்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. அதேவேளையில் மருத்துவமனையின் சுகாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது.