Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 4 அமைச்சர்கள் உட்பட 16 எம்எல்ஏ-க்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் முதல் அரசியல் விஐபிக்கள் வரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் மனைவி, மகன், மாமனார் உட்பட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் உடனடியாக கிங்ஸ் மருத்துவமனையில் தனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று கூறியுள்ளார்.

 

எனக்கு கொரோனா இருப்பதாக வெளியாகும் வதந்திகள் உண்மையல்ல, நான் நலமாக உள்ளேன் நான் வெளிப்படையான நபர் இதில் மறைக்க ஒன்றுமில்லை என்று கூறினார். ஐபிஎஸ் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை கொரோனா பாதிப்பு உண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version