கொரோனா பாதிப்பால் உலகம் முழுக்க விமான சேவைகள், ரயில் சேவைகள், போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் இந்தியர்கள் பலர் வெளிநாட்டிலேயே தங்கவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. இதன் பின்னர் அந்தந்த நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முழு பாதுகாப்புடன் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சிறப்பு விமானத்தின் மேலும் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் பல மாதங்களாக தன்னுடைய மகன் சஞ்சையை காணாமல் இருந்த விஜய், தற்போது மகனை சந்தித்து குஷியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் படித்துவந்ச சஞ்சய் கொரோனா ஊரடங்கினால் இந்தியா திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னைக்கு திரும்பிய சஞ்சய் 14 நாட்கள் ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், அண்மையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார்.
இதனால் இளையதளபதி விஜய்யின் குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். தந்தையுடன் வேட்டைக்காரன் படத்திலும், ஒரு குறும்படத்திலும் சஞ்சய் நடித்துள்ளார். மேலும் சென்னையில் உள்ள அமெரிக்க சர்வதேச பள்ளியில் படித்த சஞ்சய் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.