Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா தடுப்பூசி பரிசோதனை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது.!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி தீவிரமாக பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதிலும் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்திய தரப்பில் புதிய மருந்தினை மனிதர்கள் மீது பரிசோதனை செய்வது பற்றி பேச்சுவார்த்தை எட்டியது. மனிதர் மீது தடுப்பூசி பரிசோதனை நடத்தியதில் ரஷ்ய பல்கலைக்கழகம் அறிவித்த நிகழ்வும் குறிப்பிட வேண்டியதாகும்.

 

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கோவோச்சின் மருந்தினை மனிதர்களிடையே செலுத்தும் பரிசோதனை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது. எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி பரிசோதனை மையத்தில் சோதனை ஆரம்பித்துள்ளனர்.

 

இந்த பரிசோதனையில் முதல் டொஸ் தடுப்பூசி தரப்பட்ட தன்னார்வலர்களுக்கு 14 நாள் இடைவெளியில் 2வது தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Exit mobile version