Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பணம் இல்லாத காரணத்தால் மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயி! ஊரங்கில் பரிதாப சம்பவம்!

விவசாயம் செய்ய பணம் இல்லாத காரணத்தால் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களையே ஏரில் பூட்டி உழுத பரிதாய சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சமீப நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய பணிகளில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மதனபள்ளி என்ற பகுதியில் நாகேஸ்வர ராவ் என்ற விவசாயி, தன்னுடைய நிலத்தில் தக்காளி பயிரிட முடிவு செய்தார். இதற்கு முன்பு விளைந்த தக்காளியை ஊரடங்கு காரணத்தால் விற்க முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.

இதனால் அடுத்தகட்ட விவசாயம் செய்ய பணம் இல்லாத சூழலில், தனது மகள்களை ஏரில் பூட்டி உழுதார். இவரது மனைவி விதைகளை தூவினார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சோகத்துடன் கடந்து சென்றனர். இதுதொடர்பாக நாகேஸ்வர ராவ் கூறுகையில், எனது விவசாய நிலத்தை தாயை போல பார்க்கிறேன் குடும்பத்துடன் விவசாயம் செய்வதை மகிழ்ச்சியாக நினைக்கிறேன் என்று கூறினார்.

கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதுமே பல லட்சக்கணக்கான விவசாயிகள், சிறு குறு தொழிலாளர்கள் உட்பட பலரும் கடுமையான பண நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். சிலர் வறுமையின் காரணமாகவும், வாகனங்களின் தவணை கட்ட முடியாத காரணங்களாலும் தற்கொலை செய்து கொள்ளும் மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் ஊரடங்கு முற்றிலும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version