அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றினால் சுட்டுத்தள்ளுங்கள்! வெளிநாட்டு அதிபரின் அதிரடி பேச்சு.!!
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றும் நபர்களை சுட்டுத்தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் அதிரடியாக கூறியுள்ளார்.
உலக நாடுகளை பதம் பார்த்து வரும் கொரோனா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு மனிதர்களின் மூலமாக பரவி புது இடங்களில் கடைவிரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை கையில் எடுத்துள்ளன. பெரும்பாலான மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் சூழலில், சிலர் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் வழக்கம்போல நடமாடி காவல்துறைக்கு தொல்லை கொடுப்பதோடு கொரோனா பரவ வழிவகை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் உத்தரவை மீறி வெளியில் திரிந்தால் அவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட் கூறியுள்ளார். இதுகுறித்து மக்களிடையே அவர் உரையாற்றிய போது; ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம் இதனை மீறி சுகாதார ஊழியர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் இடையூறு கொடுப்பது குற்றமாகும். இதனால் காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு தெரிவிப்பது என்னவெனில், ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் நபர்களால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது உங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ உடனே சுட்டுத்தள்ளுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவின் அருகேயுள்ள குயிசான் நகர பகுதி மக்கள் தங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்று போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இதுவரை 2,311 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் 96 பேர் பலியாகியுள்ளனர்.