ரேசன் கடைகளில் ரூ.500 க்கு மளிகை பொருட்கள்! தமிழக அரசு நடவடிக்கை!

0
140

ரேசன் கடைகளில் ரூ.500 க்கு மளிகை பொருட்கள்! தமிழக அரசு நடவடிக்கை!

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் ஊரடங்கு இன்னொரு பக்கம் வேலை, வருமானம் இல்லாத காரணத்தால் அவசிய தேவைகளை கூட வாங்குவது சிரமமாக உள்ளது. மேலும் மளிகை கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் ஆங்காங்கே சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத சூழல் உருவாகி கொரோனா தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசே நியாயவிலைக் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

பொதுமக்களின் அத்தியாவசிய சிக்கலை தீர்க்கும் வகையில் ரூ.500 க்கு 19 மளிகை பொருட்களை ரேசன் கடைகளின் மூலம் வழங்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சீரகம் உள்ளிட்ட 19 வகையான பொருட்களை வழங்க தமிழகஅரசு திட்டமிட்டுள்ளது. முதலில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக அத்தியாவசிய பொருட்கள் பிரித்து மண்டலவாரியான கூட்டுறவு பண்டக சாலைக்கு அனுப்பப்படும். அங்கிருந்து அந்தந்த ஊர் ரேசன் கடைகளுக்கு அனுப்பி மக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் மக்கள் அத்தியாவசிய தேவையிட் காரணத்தால் மளிகை கடைகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அரசு இத்தகைய வழிமுறையை மேற்கொண்டு வருகிறது. விரைவில் ரேசன் கடைகளில் மளிகைப் பொருட்கள் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.