கொரோனா களப்பணியில் உயிரிக்க நேர்ந்தால் 10 லட்சம் நிவாரணம்! -புதுவை முதல்வர் அறிவிப்பு

0
222

கொரோனா களப்பணியில் உயிரிக்க நேர்ந்தால் 10 லட்சம் நிவாரணம்! -புதுவை முதல்வர் அறிவிப்பு

கொரோனா களப்பணியில் வேலை செய்து வருபவர்கள் உயிரிழக்க நேரிட்டால் பாதிப்பின் தன்மைக்கேற்ப 2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படும்.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த தகவல்களை அரசு வெளியிட்டு வருகிறது. புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 6 பேர், மாஹேவில் ஒருவர் உட்பட மொத்தம் 7 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாதித்த பகுதிகள் சீல் வைத்துள்ளனர்.
அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அரசே வழங்கி வருகிறது.

மேலும் புதுவை மருத்துவர்கள் இதுவரை 8 லட்சம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியுள்ளனர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய்துறை, மின்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தொடர்ந்து பணிசெய்து வருகின்றனர். இதனால்தான் புதுச்சேரியில் கொரோனா அதிகம் பரவாமல் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க இரவு, பகலாக உழைத்து வரும் பணியாளர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழக்க நேரிட்டால் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தன்மைக்கு ஏற்ப ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழகம் ஆலோசனை செய்து வருகிறுது. ஒடிசா, பஞ்சாப், கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்துள்ளது. பிரதமர் மோடி இதுகுறித்து நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பின்னரே அமைச்சரவை ஆலோசனையின் படி ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முடிவு வெளியாகும் என்று கூறப்படுகிறது.