4 ஆம் கட்ட ஊரடங்கு.! தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை.! முக்கிய முடிவுகள் வெளியாகுமா.?

0
118

4 ஆம் கட்ட ஊரடங்கு.! தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை.! முக்கிய முடிவுகள் வெளியாகுமா.?

தொழில் நிறுவன கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் இன்று மாலை தமிழக முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக கடந்த 12 ஆம் தேதி மக்களிடம் உரையாற்றி பிரதமர் மோடி 4 ஆம் கட்ட ஊரடங்கு சற்று வித்தியாசமாக இருக்கும் என்று கூறினார். நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என்று கூறினார். மேலும் மாநில அரசுகளின் பரிந்துரைகளின்படியே நான்காம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு 3 ஆம் கட்ட ஊரடங்கின் போது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன் மத்திய அரசு தளர்வினை அறிவித்தது. முடி திருத்தகம் மற்றும் பதப்படுத்தப்பட்ட ஏசி கடைகளுக்கும் தடைவிதித்து மற்ற கடைகள் கட்டுப்பாடுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் வீட்டில் முடங்கிக்கிடந்த பொதுமக்கள் சற்றே இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் 4 ஆம் கட்ட ஊரடங்கு காலத்தில் என்னென்ன தொழில் நிறுவனங்கள் கட்டுப்பாடுடன் இயங்குவது குறித்து, தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமையகத்தில் இருந்து காணொளி மூலம் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழக தொழில் நிறுவனங்கள் 4 ஆம் கட்ட ஊரடங்கில் சில விதிமுறைகளுடன் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.