Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்! – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சென்னை பகுதிகளில் ரேசன் அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனாவில் பரவல் அதிகரித்து வரும் சூழலில் அங்கு வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று அதிகரிக்காமல் இருக்க திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட நான்கு மாவட்டங்களுக்கு ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் பூந்தமல்லி, ஈக்காடு, சோழவரம் போன்ற   ஊராட்சிகளிலும் நிவாரணம் வழங்கப்படும்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு, மறைமலை நகர் நகராட்சிகளிலும், கூடுவாஞ்சேரி மற்றும் நந்திவரம் பேரூராட்சிகளிலும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் சார்ந்த அனைத்து ரேசன் அட்டைகளுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version