Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிவிஎஸ் சுந்தரம் மோட்டார் நிறுவனத்தின் பார்ட்னெர் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!

சென்னை: டிவிஎஸ் சுந்தரம் பார்ட்னெர்ஸ்  நிறுவனத்தின் தலைவர் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் உயிரிழ்ந்தார். டிவிஎஸ் குழு நிறுவனத்தில் ஒன்றான டிவிஎஸ் சுந்தரம் பார்ட்னெர்ஸ் நிறுவனததின் தலைவரான பாலகிருஷ்ணன் சில தினங்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி தென்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பிறகு அவரது பூதவுடல் உரிய சடங்குகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. இவரது ஓட்டுனருக்கு ஏற்கனவே  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

கார் ஓட்டுனர் மூலமாக பாலகிருஷ்ணனுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் அரசியல் முக்கிய புள்ளிகள் மற்றும் விஐபி மரணங்கள் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version