Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று முதல் கொரோனா தடுப்பூசி இந்த இடங்களில் போடப்படும்! மாநகராட்சி அறிவிப்பு!

இந்தியாவில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்றானது பரவிக் கொண்டே வருகிறது. அதில் இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது இரண்டு வாரங்களாக குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவலை குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மிக வேகமாக நடைபெறுகிறது.

பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை பரவும் அபாயம் உள்ளதால், இது குறித்து மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் எச்சரித்து வருகின்றனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சில நாட்களாக சென்னையில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியுள்ளது. இதனையடுத்து மீண்டும் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 45 தடுப்பூசி மையங்களிலும் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் என ஒவ்வொரு மையத்திற்கும் தலா 300 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளது.

Exit mobile version