உஷார் மக்களே! பேராபத்தில் இருந்து உங்களை காத்துக் கொள்ள நாளை முதல் காத்திருக்கும் அரிய வாய்ப்பு!

0
155
corona virus

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக ஜனவரி மாதம் 16ம் தேதி முதலே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரான கோவாக்ஸின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது. தற்போது 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட இந்த பணிகளின் படி 708 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். சுகாதார பணியாளர்கள் 6 லட்சத்து 32 ஆயிரத்து 594 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 5 லட்சத்து 85 ஆயிரத்து 544 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 45 வயதுக்கும் மேற்பட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள் 7 லட்சத்து 40 ஆயிரத்து 424 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 9 லட்சத்து 15 ஆயிரத்து 146 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இரண்டாவது டோஸ் 28 நாட்களுக்குப் பிறகு செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய அரசு 4 வாரம் முதல் 6 வாரத்திற்குள் 2வது தவணை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி தடுப்பூசி 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எவ்வித இணை நோய் இல்லாதவர்களும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்களும், அரசின் 1,900 மினி கிளிக்குகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 2ம் தேதி தமிழகத்திற்கு மத்திய அரசு சார்பில் கூடுதலாக 7 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.      நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாகவே 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.