7 முதல் 11 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! அனுமதி வழங்கிய ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம்!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.தற்பொழுது செலுத்தப்பட்டும் வருகிறது.முதலில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனை நடத்த அனுமதி வாங்கியது.அதனையடுத்து ஜைடஸ் காடிலா நிறுவனம் தயாரித்த டி.என்.எ தடுப்பூசியை 12 முதல் 17 வயதுள்ள சிறுவர்களும் அவசரகால பயன்பாட்டிற்கு செலுத்துவதற்காக அனுமதி வழங்கப்பட்டது.அதேபோல தற்பொழுது சீரம் நிறுவனமும் 12 முதல் 17 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை செய்ய மருந்து தர கட்டுப்பாடு கழகம் அனுமதி வழங்கியது.
அனுமதி வழங்கிய உடன் சீரம் நிறுவனம் 12 முதல் 17 வயது உள்ள சிறுவர்கள் 100 பேருக்கு பரிசோதனையின் பெயரில் கொரோனா தடுப்பூசி செலுத்தியது. அவ்வாறு செலுத்தியதில் 100 சிறுவர்களுக்கும் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து காணப்பட்டது.அதனால் சீரம் நிறுவனம் அதன் அடுத்த படியாக இத்தடுப்பூசியை ஒரு வயது முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை நடத்த மீண்டும் ஒன்றிய மருந்து தர கட்டுப்பாட்டு கழகத்திடம் அனுமதி கேட்டுள்ளது.சென்ற முறை செய்த பரிசோதனையில் 100% முடிவு தெரிந்ததால் தற்போது 7 வயது முதல் 11 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை செலுத்துவதற்கு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்றாவது அலையில் சிறுவர்கள் அதிக பாதிக்கப்படுவதாக பேசப்பட்டு வருகிறது.அதனால் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக தடுப்பூசி போடுவது கட்டாயமாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த பரிசோதனை இந்தப் பின் விளைவுகள் இன்றி முடிவுகள் வருமாயின் கூடிய விரைவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி தற்பொழுது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பட்டுள்ளது.பல வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தும் ஓர் சில மாணவர்களுக்கு கொரோனா தோற்றால் பாதிப்படைந்து தான் வருகின்றனர்.அதனை தடுக்க கட்டாயம் தடுப்பூசி நடைமுறைக்கு வரவேண்டும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.