Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மனநலம் பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – சென்னை உயர்நீதி மன்றம்

Madras High Court

மாநில மனநல கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும், தெருவில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் எனவும், சீர் என்னும் தொண்டு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோரின் முன்பு நேற்று இந்த மனுவின் மீதான வழக்கு விசாரணை நடந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் இதுவரை 396 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டது.

அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், இதுவரை தமிழக அரசால் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட சென்னையை சேர்ந்தவர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் சென்னையில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும், உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கூறினர்.

அரசு மனநல காப்பகத்தை உரிய முறையில் சீரமைக்க வேண்டும், சென்னையில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது ன்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்தி வைத்தது.

Exit mobile version