Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனாவிற்கு கண்டுபிடிக்கப்பட்ட சித்த மருந்து! நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய கோரி ஐகோர்ட் உத்தரவு

Corona Vaccine In Siddha-News4 Tamil Online Tamil News

Corona Vaccine In Siddha-News4 Tamil Online Tamil News

கொரோனாவிற்கு கண்டுபிடிக்கப்பட்ட சித்த மருந்து! நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய கோரி ஐகோர்ட் உத்தரவு

கொரோனாவிற்கு சித்த மருத்துவர் கண்டுபிடிக்கப்பட்ட இம்ப்ரோ என்ற மருந்தை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு. மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன். இவர் தான் கண்டுபிடித்த இம்ப்ரோ என்ற மருந்தை ஆய்வு செய்ய வேண்டி மனு ஒன்றை மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ளார் .

இந்த மனு நேற்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.எனவே மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு ஆஜராகி இந்த மனு தொடர்பாக 30, 000 விண்ணப்பங்கள் வந்துள்ளன.மேலும் இவரது கண்டுபிடிப்புக்கு பேடண்ட் ரைட் கோருகிறார்.வைரலாஜி முடிவு சமர்பிக்கப்படவில்லை எனவே இவர் கண்டுபிடிப்பை ஆய்வு செய்யவில்லை என்றார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, மத்திய அரசின் ஆயுஷ் பரிந்துரைப்படி கொரோனாவுக்கு யுனானி என்ற மருத்துவத்தில் உள்ள பெகிண்டா, உன்னாப் மற்றும் சபிஷ்டா போன்ற மருந்துகளும் ஹோமியோபதியில் உள்ள பிரையோனியால்பா ஆர்சனிகம், ஆல்பம் 30 சி, பிரை யோனியால்பா மருந்துகளும் தசமூல கபத்ராம் கசாயம், இந்துபாத கசாயம், வியக்ரியாதி கசாயம் ஆகிய ஆயுர்வேத மருந்துகளும், அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகிய சித்த மருத்துகளும் தரப்படுகிறது. சென்னை அரும்பாக்கத்தில் ரூ.12 கோடி செலவில் புதிய ஆராய்ச்சி பிரிவு துவக்கப்பட்டுள்ளது என்றார்.

இதனை அடுத்து நீதிபதிகள் “தமிழக அரசு சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் இந்த குழு முன் வரும் ஜூன் 26 அன்று மனுதாரர் தனது மருந்தின் விளக்கத்தை அளிக்க வேண்டும்.மேலும் இந்த குழு அந்த மருந்தினை ஆய்வு செய்து அறிக்கையானது வரும் ஜூன் 30 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version