கொரோனா தடுப்பூசி போட்டாச்சா! சிறப்பு நிதி வாங்கலாம்!

0
203
Corona Vaccine Potash! Buy special funds!

கொரோனா தடுப்பூசி போட்டாச்சா! சிறப்பு நிதி வாங்கலாம்!

கொரோனா இரண்டாவது அலையின் கோர தாண்டவம் அனைத்து மாநிலங்களிலும் தன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது.இதை நாம் அறிந்தாலும் நமக்கு என்ன என்று தனி நபர் இடைவெளி விடாமல் ஊர் சுற்றுகிறோம்.

அதன் காரணமாக மாநில அரசுகள் அனைவருக்கும் ஏற்ற வகையில் வெளிநாடுகளில் இருந்து தடுப்பு மருந்துகளை வாங்கி வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த கிராம பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்களுடன் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் நேற்று காணொலி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது அவர், கொரோனாவை முற்றிலுமாக வேரறுக்கும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் நூறு சதவிகிதம் கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மேம்பட்டு நிதியாக ரூ.10 இலட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மக்களிடம் தடுப்பூசி போடவும், கோரோனாவிற்கு உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தவும் வேண்டும் என்று பஞ்சயது தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் கூறினார்.

கொரோனாவின் கொடிய தாக்கத்தை பற்றியும், அதன் விளைவுகளையும் ஆரம்பநிலையில் கண்டறிவதை பற்றியும் கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது அதிக அளவிலான உயிர் இழப்புகளை தடுக்க முடியும் எனவும் அமரிந்தர் சிங் கூறினார்.

மேலும் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் ராணுவத்தினரையும் சேவையில் ஈடுபடுத்தி கொள்ளலாம் எனவும் கூறினார்.

மேலும் பஞ்சாயத்து நிதியில் இருந்து தினமும் ரூ.5000 முதல் ரூ.50000 வரை பயன்படுத்த மாநில அரசு அறிவித்து இருப்பதையும் கிராம சபை தலைவர்களிடம் அமரிந்தர் சிங் தெரிவித்தார்.