Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா வைரஸ் : இன்று ஒரே நாளில் 5,072 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,942 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக இன்று ஒரே நாளில் 72 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரி்ழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,796 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 55,388 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version