Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாலைகளில் கிடந்த ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் பரவலா? அதிர்ச்சி தகவல்

Corona Virus in Currency Notes in Chennai-News4 Tamil Online Tamil News

Corona Virus in Currency Notes in Chennai-News4 Tamil Online Tamil News

சாலைகளில் கிடந்த ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் பரவலா? அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்தியாவில் இதுவரை 26 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் தோற்று ஏற்பட்டுள்ளது. 800 நபர்களுக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கபட்டுள்ளது.இது மட்டுமில்லாமல் பாதிப்பு குறைவாக உள்ள சில இடங்களில் தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு தற்போதும் அமலில் உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ள சென்னை,கோவை,மதுரை,சேலம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இந்த 5 மாநகரங்களில், முழு ஊரடங்கை பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

முழு ஊரடங்கை கடைபிடித்து வரும் இந்நிலையில் சென்னையில் சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள கொருக்குபேட்டையில் உள்ள ஒரு சாலையில் இந்த சம்பவமானது நடந்திருக்கிறது. நான்கு 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு 50 ரூபாய் நோட்டும் அந்த சாலையில் கிடந்திருக்கிறது. இதனையடுத்து அனாதையாக கிடந்த அந்த ரூபாய் நோட்டுகளை புகைப்படம் எடுத்து, இது கொரோனா வைரசை பரப்புவதற்காக அப்பகுதியில் வீசப்பட்டுள்ளது என சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பியுள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் சென்னை மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் சாலையில் கிடந்த அந்த ரூபாய் நோட்டுக்கள் மீது கிருமி நாசினியை தெளித்துள்ளனர்.

பின்னர் சாலையில் கிடந்த அந்த ரூபாய் நோட்டுகளையும் அங்கிருந்து எடுத்து அப்புறபடுத்தியுள்ளனர். உண்மையாகவே அந்த நோட்டுகள் கொரோனா வைரசை பரப்ப சாலையில் வீசப்பட்டதா இல்லையா என்பது பற்றி முழுமையான விவரம் தெரியவில்லை. ஆனால், ஊரடங்கு நேரத்தில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பிய நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version