Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டமாக உருவெடுக்கலாம் – ஐரோப்பா எச்சரிக்கை

கிருமிப்பரவல் இரண்டாம் கட்டமாக உருவெடுக்கலாம் என்று ஐரோப்பா எச்சரித்துள்ளது.  அந்தக் கண்டத்தின் சில பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியும், பிரிட்டனும் ஐரோப்பாவின் பெரிய பொருளியல்களைக் கொண்ட நாடுகள். கிருமிப்பரவல் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக அவ்விரண்டு நாடுகளும் தெரிவித்துள்ளன. ஸ்பெயினிலிருந்து வருவோரைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற பிரிட்டனின் முடிவைப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்காத்துப் பேசியுள்ளார்.

ஜெர்மனியிலும் நிலைமை சீராக இல்லை. மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதால், கிருமிப் பரவல் அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கவலைப்படுகின்றனர். புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு பர்லின் தீவிரமாய் முயன்று வருகிறது. ஸ்பெயினின் சில பகுதிகளுக்குச் செல்வதன் தொடர்பில் பயண அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் புதிதாக 900க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version