கொரோனாவில் இருந்து தப்பிக்க கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் உயிரிழப்பு! வதந்தியை நம்பியதால் வந்தவினை!

0
227

கொரோனாவில் இருந்து தப்பிக்க கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் உயிரிழப்பு! வதந்தியை நம்பியதால் வந்தவினை!

சீனாவில் உருவான கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உலகத்தையே அச்சுறுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் முகமூடியை அணிந்து மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரது செல்போன் ரிங்டோனிலும் கரோனா வைரஸ் அறிகுறி பற்றிய விழிப்புணர்வு தகவலை புதியதாக அனைத்து போன் சேவைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை பலர் வரவேற்று பேசியதோடு அவரவர் மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதன்பின்னர் ஈரான் வடகொரியா போன்ற நாடுகளில் கரோனா வேகமாக பரவியதில் ஈரானில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஏழாயிரம் பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிக்க இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாவில் இருந்து தப்பிக்க மது குடித்தால் போதும் என்ற பொய்யான தகவல் இணையத்தில் பரவியதை நம்பி கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதை நம்பி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்த 214 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர். யாரோ பரப்பிய வதந்தியை நம்பியதால் இந்த உயிரிழப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களை தனிமைபடுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸை குறித்து பயப்பட வேண்டாம், முக கவசமும்அணிய வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகத்தில் கவசங்களை அணிந்த படங்களை பதிவேற்ற பேஸ்புக் நிறுவனமும் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக தினசரி பல்வேறு விழிப்புணர்வுகளும் அறிவுரைகளும் பல்வேறு தரப்பில் கூறப்பட்டாலும் கொரோன வைரஸால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க முடியவில்லை.