கோழிக்கோடு விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா:? அச்சத்தில் மீட்புக்குழுவினர்?

0
111

துபாயிலிருந்து 191 பயணிகளுடன் கோழிக்கோட்டை வந்தடைந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஏர் இந்தியா விமான சேவை நிறுவன அதிகாரிகளுடன் இன்று திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, விமான விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் கேரளா மாநில முதல்வர் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா சார்பில் பேசிய ஹரிதீப் சிங் கூறியவாறு கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 12 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பின் அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார்.