Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!! ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ!

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!!
ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ!

கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாக்க எல்லா நாடுகளிலும் முகத்தில் மாஸ்க் அணிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் நடந்த திருமணம் ஒன்றில் மணமக்கள் மாஸ்க் அணிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் வூகான் பகுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கு பரவி பொதுமக்களிடையே உயிர் பயத்தை உண்டாக்கி வருகிறது. மொத்தமாக கொரோனாவால் மட்டுமே இதுவரை 4000 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் அதிகம்  தாக்கத்தை ஏற்படுத்தி பலரை காவுவாங்கிய கொரோனா இந்தியாவிலும் தற்போது தனது வேலையை காட்டத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸால் 140 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நோயில் இருந்து மக்களை பாதுக்காக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, போன்ற பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது போல தமிழ்நாட்டிலும் கொரோனோ பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/maryashakil/status/1240162439297024000?s=20

இந்நிலையில், ஆந்திராவில் நடந்த திருமணம் ஒன்றில் திருமண தம்பதிகள் முகத்தில் மாஸ் அணிந்து கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்த காணொளியில் மணமக்களை சுற்றி இருந்த சொந்தபந்தங்களும் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு வாழ்த்துவது போல் நின்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும் பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Exit mobile version