Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா 2ம் அலை தீவிரம்: இன்று முதல் பேருந்துகள் இயங்காது…!

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதாக மத்திய, மாநில அரசுகள் கவலை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொற்றின் தீவிரம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பரவல் 1,122 ஆக உயர்ந்துள்ளது. உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த ஊரடங்கு இரண்டு மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இருந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அகமதாபாத் நகரில் உள்ள உயிரியல் பூங்காக்களையும், கன்காரியா ஏரிப்பகுதியையும், மாநகராட்சி பூங்காக்களையும் இம்மாதம் 31-ந்தேதி வரை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அகமதாபாத் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேருந்து மற்றும் விரைவு பேருந்து சேவை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version